இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்துவரும் நியூசிலாந்து அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடிவருகிறது. இதில் லண்டனில் நடைபெற்ற முதல் போட்டியில் பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணி அசத்தல் வெற்றியைப் பதிவுசெய்தது.
இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று நாட்டிங்ஹாமில் நடைபெறுகிறது. இப்போட்டிக்கு முன்னதாக நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் கரோனா தொற்று காரணமாக இப்போட்டியிலிருந்து விலகியுள்ளார்.
இதனால் இரண்டாவது போட்டிக்கான நியூசிலாந்து அணியின் கேப்டனாக டால் லேதம் செயல்படுகிறார். இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் முதலில் பந்துவீச தீர்மானித்துள்ளார்.
நியூசிலாந்து: டாம் லாதம்(கே), வில் யங், டெவோன் கான்வே, ஹென்றி நிக்கோல்ஸ், டேரில் மிட்செல், டாம் ப்ளூன்டெல், மைக்கேல் பிரேஸ்வெல், கைல் ஜேமிசன், டிம் சவுத்தி, மாட் ஹென்றி, டிரென்ட் போல்ட்
இங்கிலாந்து: அலெக்ஸ் லீஸ், சாக் கிராலி, ஒல்லி போப், ஜோ ரூட், ஜானி பேர்ஸ்டோ, பென் ஸ்டோக்ஸ்(கே), பென் ஃபோக்ஸ், மேட்டி பாட்ஸ், ஜாக் லீச், ஸ்டூவர்ட் பிராட், ஜேம்ஸ் ஆண்டர்சன்