நியூசிலாந்து அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் தொடரில் விளையாடிவருகிறது. இதில் முதலில் நடைபெற்ற முதலிரண்டு டி20 போட்டியிலும் இங்கிலாந்து அணி வெற்றிபெற்று, 2-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலையும் பெற்றுள்ளது.
இதையடுத்து இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டி20 போட்டி இன்று பர்மிங்ஹாமில் உள்ள எட்ஜ்பாஸ்டனில் இன்று நடைபெறுகிறது. இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்துள்ளது.
நியூசிலாந்து: ஃபின் ஆலன், டெவோன் கான்வே, டிம் செய்ஃபெர்ட் , கிளென் பிலிப்ஸ், மார்க் சாப்மேன், டேரில் மிட்செல், மிட்செல் சான்ட்னர், கைல் ஜேமிசன், டிம் சௌதீ (கே), மேட் ஹென்றி, இஷ் சோதி.
இங்கிலாந்து : ஜானி பேர்ஸ்டோவ், வில் ஜாக்ஸ், டேவிட் மாலன், ஹாரி புரூக், ஜோஸ் பட்லர்(கே), மொயின் அலி, லியாம் லிவிங்ஸ்டோன், கிறிஸ் ஜோர்டான், அடில் ரஷித், லூக் வூட், கஸ் அட்கின்சன்