நியூசிலாந்து அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் தொடரில் விளையாடிவருகிறது. இதில் முதலில் நடைபெற்ற முதலிரண்டு டி20 போட்டியில்ம் இங்கிலாந்து அணியும், 3ஆவது போட்டியில் நியூசிலாந்து அணியும் வெற்றிபெற்று 2-1 என்ற கணக்கில் தொடரில் நீடிக்கிறது.
இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான நான்காவது மற்றும் கடைசி டி20 போட்டி நாட்டிங்ஹாமிலுள்ள டிரெண்ட் பிரிட்ஜில் இன்று நடைபெறுகிறது. இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்துள்ளார். இப்போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றிபெற்றால் தொடரைக் கைப்பற்றும் என்பதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
நியூசிலாந்து : ஃபின் ஆலன், ரச்சின் ரவீந்திரா, டிம் செய்ஃபர்ட், க்ளென் பிலிப்ஸ், மார்க் சாப்மேன், டேரில் மிட்செல், மிட்செல் சான்ட்னர், கைல் ஜேமிசன், டிம் சௌதீ(கே), மேட் ஹென்றி, இஷ் சோதி
இங்கிலாந்து: ஜானி பேர்ஸ்டோவ், வில் ஜாக்ஸ், டேவிட் மலான், ஹாரி புரூக், லியாம் லிவிங்ஸ்டோன், மொயின் அலி(கே), சாம் கரன், ரெஹான் அகமது, பிரைடன் கார்ஸ், அடில் ரஷித், லூக் வுட்