இலங்கை அணி தற்சமயம் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடரில் நடைபெற்று முடிந்த முதல் டெஸ்ட் போட்டியின் முடிவில் இங்கிலாந்து அணியானது 5 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை அணியை வீழ்த்தி வெற்றிபெற்று அசத்தியது. இந்த வெற்றியின் மூலம் இங்கிலாந்து அணியானது இந்த டெஸ்ட் தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையும் பெற்றுள்ளது.
இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியானது இன்று (ஆகஸ்ட் 29) லண்டனில் உள்ள புகழ்பெற்ற லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இப்போட்டியில் டாஸை வென்ற இலங்கை அணியனது முதலில் பந்துவீசுவதாக அறிவித்து, இங்கிலாந்து அணியை பேட்டிங் செய்ய அழைத்துள்ளது. இரு அணிகளிலும் நட்சத்திர வீரர்கள் இருப்பதால் இப்போட்டியின் மீதுள்ள எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன.
இலங்கை அணி பிளேயிங் லெவன்: திமுத் கருணாரத்ன, பதும் நிஷங்கா, நிஷான் மதுஷ்கா, ஏஞ்சலோ மேத்யூஸ், தினேஷ் சந்திமால், தனஞ்சய டி சில்வா (கே), கமிந்து மெண்டிஸ், பிரபாத் ஜயசூரிய, அசித்த ஃபெர்னாண்டோ, லஹிரு குமாரா, மிலன் ரத்நாயக்க
இங்கிலாந்து பிளேயிங் லெவன்: டேன் லாரன்ஸ், பென் டக்கெட், ஒல்லி போப் (கே) ஜோ ரூட், ஹாரி புரூக் , ஜேமி ஸ்மித், கிறிஸ் வோக்ஸ், கஸ் அட்கின்சன், மேத்யூ பாட்ஸ், ஒல்லி ஸ்டோன், சோயிப் பஷீர்.