
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து வரும் வெஸ்ட் இண்டீஸ் அணி தற்சமயம் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டியானது செஸ்டர்-லெ-ஸ்ட்ரீட் உள்ள ரிவர்சைட் மைதானத்தில் இன்று நடைபெறுகிறது. இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்துள்ளது.
இதில் ஏற்கெனவே இங்கிலாந்து அணி ஒருநாள் தொடரை வென்ற உத்வேகத்துடன் இப்போட்டியை எதிர்கொள்கிறது. மறுபக்கம் ஒருநாள் தொடரை இழந்துள்ள வெஸ்ட் இண்டீஸ் அதற்கான பதிலடியைக் கொடுக்கும் முனைப்பில் விளையாடவுள்ளது. இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
வெஸ்ட் இண்டீஸ் பிளேயிங் லெவன்: ஜான்சன் சார்லஸ், எவின் லூயிஸ், ஷாய் ஹோப்(கே), ரோஸ்டன் சேஸ், ஷெர்பேன் ரூதர்ஃபோர்ட், ரோவ்மேன் பவல், ஜேசன் ஹோல்டர், ஆண்ட்ரே ரஸல், ரொமாரியோ ஷெப்பர்ட், குடகேஷ் மோட்டி, அல்சாரி ஜோசப்
இங்கிலாந்து பிளேயிங் லெவன்: ஜேமி ஸ்மித், பென் டக்கெட், ஜோஸ் பட்லர், ஹாரி புரூக்(கேப்டன்), டாம் பான்டன், ஜேக்கப் பெத்தேல், வில் ஜாக்ஸ், லியாம் டாசன், பிரைடன் கார்ஸ், ஆதில் ரஷித், மேத்யூ பாட்ஸ்