இங்கிலாந்து அணி தற்சமயம் வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும், 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியானது 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது.
இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான ஒருநாள் தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் இரண்டாவது ஒருநாள் போட்டியானது இன்று ஆண்டிகுவாவில் உள்ள சர் விவியன் ரிச்சர்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள இங்கிலாந்து அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்து வெஸ்ட் இண்டீஸ் அணியை பேட்டிங் செய்ய அழைத்துள்ளது.
இத்தொடரின் முதல் போட்டியில் வெற்றிபெற்றுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணியானது இப்போட்டியிலும் வெற்றிபெற்று தொடரை கைப்பற்றும் முனைப்புடனும், இங்கிலாந்து அணி இப்போட்டியில் வெற்றி பெற்று தொடரை சமன் செய்யும் முனைப்புடனும் இப்போட்டியை எதிர்கொள்ளவுள்ளதால் இதில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
வெஸ்ட் இண்டீஸ் பிளேயிங் லெவன்: பிராண்டன் கிங், எவின் லூயிஸ், கேசி கார்டி, ஷாய் ஹோப்(கே), ஷிம்ரான் ஹெட்மையர், ஷெர்பேன் ரூதர்ஃபோர்ட், ரோஸ்டன் சேஸ், குடகேஷ் மோட்டி, மேத்யூ ஃபோர்டே, ஜேடன் சீல்ஸ், ஷமர் ஜோசப்
இங்கிலாந்து பிளேயிங் லெவன்: பிலிப் சால்ட், வில் ஜாக்ஸ், ஜோர்டான் காக்ஸ், ஜேக்கப் பெத்தேல், லியாம் லிவிங்ஸ்டோன்(கே), சாம் கரன், டான் மவுஸ்லி, ஆதில் ரஷித், ஜோஃப்ரா ஆர்ச்சர், சாகிப் மஹ்மூத், ஜான் டர்னர்.