வெஸ்ட் இண்டீஸ் அணியானது தற்போது இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இதில் நடைபெற்று முடிந்த முதலாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி இன்னிங்ஸ் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன் 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலைப் பெற்றுள்ளது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியானது இன்று (ஜூலை 18) நாட்டிங்ஹாமில் உள்ள டிரெண்ட் பிரிட்ஜ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இப்போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணியானது முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. ஏற்கெனவே வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் போட்டியில் தோல்வியைத் தழுவியுள்ளதால் அதற்கு பதிலடி கொடுக்கும் முனைப்பில் இப்போட்டியை எதிர்கொள்ளவுள்ளது. அதேசமயம், இங்கிலாந்து அணி இப்போட்டியிலும் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றும் முனைப்புடன் விளையாடும் என்பதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகளும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளன.
இந்நிலையில் இப்போட்டிக்கான இரு அணிகளின் பிளேயிங் லெவனும் நேற்றைய தினம் அறிவிக்கப்பட்டது. இதில் வெஸ்ட் இண்டீஸ் அணியில் இடம்பிடித்திருந்த குடகேஷ் மோட்டி உடல்நிலை சரியில்லாத காரணத்தால் பிளேயிங் லெவனில் இருந்து நீக்கப்பட்டு கெவின் சின்க்ளர் பிளேயிங் லெவனில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இங்கிலாந்து பிளேயிங் லெவன்: ஸாக் கிராலி, பென் டக்கெட், ஒல்லி போப், ஜோ ரூட், ஹாரி புரூக், பென் ஸ்டோக்ஸ் (கேப்டன்), ஜேமி ஸ்மித், கிறிஸ் வோக்ஸ், கஸ் அட்கின்சன், மார்க் வூட், சோயிப் பஷீர்
வெஸ்ட் இண்டீஸ் அணி பிளேயிங் லெவன்: கிரேக் பிராத்வைட் (கேப்டன்), மைக்கேல் லூயிஸ், கிர்க் மெக்கென்சி, அலிக் அதானாஸ், கவேம் ஹாட்ஜ், ஜேசன் ஹோல்டர், ஜோசுவா டா சில்வா (வாரம்), கெவின் சின்க்ளர், அல்சாரி ஜோசப், ஷமர் ஜோசப் மற்றும் ஜெய்டன் சீல்ஸ்.