வெஸ்ட் இண்டீஸ் அணியானது தற்போது இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இதில் நடைபெற்று முடிந்த முதலிரண்டு டெஸ்ட் போட்டிகளின் முடிவில் இங்கிலாந்து அணி வெற்றிபெற்றதுடன் 2-0 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரையும் கைப்பற்றி அசத்தியுள்ளது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியானது இன்று (ஜூலை 26) பர்மிங்ஹாமில் உள்ள எட்ஜ்பாஸ்டன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது.
அதன்படி இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணியானது முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்துள்ளது. இன்றைய போட்டிக்கான வெஸ்ட் இண்டீஸ் அணியில் ஷமார் ஜோசப் இடம்பிடித்துள்ளார். மேற்கொண்டு இத்தொடரை முழுமையாக கைப்பற்றும் முனைப்புடன் இங்கிலாந்து அணியும், ஆறுதல் வெற்றியைத் தேடும் முனைப்பில் வெஸ்ட் இண்டீஸ் அணியும் விளையாடும் என்பதால் இப்போட்டியின் மீதான எதிர்பர்ப்புகளும் அதிகரித்துள்ளன.
இங்கிலாந்து பிளேயிங் லெவன்: ஸாக் கிராலி, பென் டக்கெட், ஒல்லி போப், ஜோ ரூட், ஹாரி புரூக், பென் ஸ்டோக்ஸ் (கே), ஜேமி ஸ்மித், கிறிஸ் வோக்ஸ், கஸ் அட்கின்சன், சோயப் பஷீர், மார்க் வுட்.
வெஸ்ட் இண்டீஸ் பிளேயிங் லெவன்: கிரேக் பிராத்வைட் (கேப்டன்), மைக்கேல் லூயிஸ், கிர்க் மெக்கென்சி, அலிக் அதானச், கேவம் ஹாட்ஜ், ஜேசன் ஹோல்டர், ஜோசுவா டி சில்வா, அல்ஸாரி ஜோசப், குடாகேஷ் மோட்டி, ஷமார் ஜோசப், ஜெய்டன் சீல்ஸ்.