ஐபிஎல் 2024: குஜராத் டைட்டன்ஸ் vs மும்பை இந்தியன்ஸ் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
இந்தியாவில் நடைபெற்றுவரும் ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் கலைகட்ட தொடங்கியுள்ளது. இத்தொடரில் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்திருந்த ஐபிஎல் தொடரின் 5ஆவது லீக் போட்டியில் ஷுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் மற்றும் ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணிகள் நாளை பலப்பரீட்சை நடத்தவுள்ளது. இதில் கடந்த இரண்டு சீசன்களாக குஜராத் அணியை வழிநடத்தி வந்த ஹர்திக் பாண்டியா இந்தாண்டு மும்பை இந்தியன்ஸ் அணிக்கு சென்றதுடன் அந்த அணியின் கேப்டனாகவும் செயல்படவுள்ளார். அதேசமயம் ஹர்திக் பாண்டியா விட்டுச்சென்ற இடத்தை நிரப்பும் வகையில் நட்சத்திர வீரர் ஷுப்மன் கில் குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.
கிரிக்கெட்: Tamil Cricket News