இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி 3 ஒருநாள் மற்றும் 3 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் முதலில் நடந்த ஒருநாள் போட்டி தொடரில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி 3-0 என்ற கணக்கில் தொடரை முழுமையாக கைப்பற்றி அசத்தியது.
இந்த நிலையில் இந்தியா-நியூசிலாந்து அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரின் முதலாவது கிரிக்கெட் போட்டி ஜார்கண்ட் மாநில தலைநகர் ராஞ்சியில் இன்று நடக்கிறது. டி20 தொடரில் இந்திய அணி ஹர்திக் பாண்ட்யா தலைமையில் களம் இறங்குகிறது. துணைகேப்டனாக சூர்யகுமார் யாதவ் நியமிக்கப்பட்டுள்ளார்.
இப்போட்டியில் இந்திய அணி முதலில் பந்துவீச தீர்மானித்தி நியூசிலாந்து அணியை பேட்டிங் செய்ய அழைத்துள்ளது. இன்றைய போட்டிக்கான இந்திய அணியில் யுஸ்வேந்திர சஹால், பிரித்வி ஷா, முகேஷ் குமார், ஜித்தேச சர்மா ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.
நியூசிலாந்து: ஃபின் ஆலன், டெவோன் கான்வே, மார்க் சாப்மேன், டேரில் மிட்செல், க்ளென் பிலிப்ஸ், மிட்செல் சான்ட்னர்(கே), மைக்கேல் பிரேஸ்வெல், ஜேக்கப் டஃபி, இஷ் சோதி, லோக்கி ஃபெர்குசன், பிளேயர் டிக்னர்
இந்தியா: இஷான் கிஷன், ஷுப்மான் கில், ராகுல் திரிபாதி, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா(கே), தீபக் ஹூடா, வாஷிங்டன் சுந்தர், சிவம் மாவி, குல்தீப் யாதவ், உம்ரான் மாலிக், அர்ஷ்தீப் சிங்.