ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக அரங்கேறி வருகிறது. இதில் இன்று நடைபெறும் 16ஆவது லீக் போட்டியில் டாம் லேதம் தலைமையிலான நியூசிலாந்து அணியும், ஹஸ்மதுல்லா ஷாஹிடி தலைமையிலான ஆஃப்கானிஸ்தான் அணியும் சென்னையிலுள்ள எம் ஏ சிதம்பரம் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள ஆஃப்கானிஸ்தான் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்துள்ளது. இன்றைய போட்டிகான நியூசிலாந்து அணியில் கேன் வில்லியம்சனுக்கு பதிலாக வில் யங் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் ஏற்கெனெவே ஆஃப்கானிஸ்தான் அணி நடப்பு சாம்பியன் இங்கிலாந்து அணியை வீழ்த்தி அதிர்ச்சிகொடுத்துள்ள நிலையில், நியூசிலாந்துக்கும் அதிர்ச்சியளிக்குமா என எதிர்பார்க்கப்படுகிறது.
நியூசிலாந்து: டெவோன் கான்வே, வில் யங், ரச்சின் ரவீந்திரா, டேரில் மிட்செல், டாம் லாதம்(கே), க்ளென் பிலிப்ஸ், மார்க் சாப்மேன், மிட்செல் சான்ட்னர், மாட் ஹென்றி, லாக்கி பெர்குசன், டிரென்ட் போல்ட்
ஆஃப்கானிஸ்தான்: ரஹ்மானுல்லா குர்பாஸ், இப்ராஹிம் சத்ரான், ரஹ்மத் ஷா, ஹஷ்மத்துல்லா ஷாஹிதி(கே), அஸ்மத்துல்லா உமர்சாய், இக்ரம் அலிகில், முகமது நபி, ரஷித் கான், முஜீப் உர் ரஹ்மான், நவீன் உல் ஹக், ஃபசல்ஹக் ஃபரூக்கி.