ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் இன்று லக்னோவில் உள்ள ஏக்னா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் 10ஆவது லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா - தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதுகின்றன.
இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்துள்ளது. இன்றைய போட்டிக்கான ஆஸ்திரேலிய அணியில் மார்கஸ் ஸ்டொய்னிஸ், ஜோஷ் இங்கிலிஸ் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். தென் ஆப்பிரிக்க அணியில் தப்ரைஸ் ஷம்ஸி அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
தென் ஆப்பிரிக்கா: குயின்டன் டி காக், டெம்பா பவுமா(கே), ரஸ்ஸி வான் டெர் டுசென், ஐடன் மார்க்ரம், ஹென்ரிச் கிளாசென், டேவிட் மில்லர், மார்கோ ஜான்சன், கேசவ் மகாராஜ், லுங்கி இங்கிடி, ககிசோ ரபாடா, தப்ரைஸ் ஷம்சி.
ஆஸ்திரேலியா: டேவிட் வார்னர், மிட்செல் மார்ஷ், ஸ்டீவன் ஸ்மித், மார்னஸ் லாபுஷாக்னே, ஜோஷ் இங்கிலிஸ், கிளென் மேக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டோனிஸ், பாட் கம்மின்ஸ் (கே), மிட்செல் ஸ்டார்க், ஆடம் ஜம்பா, ஜோஷ் ஹேசில்வுட்.