ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக அரங்கேறி வருகிறது. இதில் இன்று நடைபெறும் 17ஆவது லீக் போட்டியில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியும், ஷாகிப் அல் ஹசன் தலைமையிலான வங்கதேச அணியும் புனேவில் பலப்பரீட்சை நடத்துகின்றன.
இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள வங்கதேச அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்துள்ளது. இன்றைய போட்டிக்கான வங்கதேச அணியில் கேப்டன் ஷாகிப் அல் ஹசன் காயம் காரணமாக விளையாடவில்லை. அதேசமயம் இந்திய அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.
வங்கதேசம்: லிட்டன் தாஸ், தன்ஸித் ஹசன், நஜ்முல் ஹொசைன் சாண்டோ(கே), மெஹிதி ஹசன் மிராஸ், தாஹித் ஹிரிடோய், முஷ்பிக்கூர் ரஹீம், மஹ்முதுல்லா, நசும் அகமது, ஹசன் மஹ்மூத், முஸ்தாஃபிசூர் ரஹ்மான், ஷோரிஃபுல் இஸ்லாம்
இந்தியா: ரோஹித் சர்மா (கே), ஷுப்மான் கில், விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், கேஎல் ராகுல், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ்.