ஐசிசியின் ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் கோலாகலமாக தொடங்கி நடைபெற்றுவருகிறது. மொத்தம் 10 அணிகள் பங்கேற்றுள்ள இத்தொடரில் எந்த அணி கோப்பையை வென்று புதிய சாம்பியனாக வலம் வரும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
இதில் நாளை நடைபெறும் 13ஆவது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணியும், ஹஸ்மதுல்லா ஷாஹிதி தலைமையிலான ஆஃப்கானிஸ்தன் அணியும் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள இங்கிலாந்து அணி கேப்டன் ஜோஸ் பட்லர் முதலில் பந்துவீசுவதாக அறிவித்துள்ளார். இன்றைய போட்டிக்கான இங்கிலாந்து அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. ஆஃப்கானிஸ்தான் அணியில் நஜிபுல்லா ஸத்ரான் நீக்கப்பட்டு இக்ரம் அலிகில் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
ஆஃப்கானிஸ்தான்: ரஹ்மானுல்லா குர்பாஸ், இப்ராஹிம் ஸத்ரான், ரஹ்மத் ஷா, ஹஷ்மத்துல்லா ஷாஹிதி(கே), முகமது நபி, இக்ராம் அலிகில், அஸ்மத்துல்லா உமர்சாய், ரஷித் கான், முஜீப் உர் ரஹ்மான், நவீன்-உல்-ஹக், ஃபசல்ஹாக் ஃபரூக்கி.
இங்கிலாந்து: ஜானி பேர்ஸ்டோவ், டேவிட் மலான், ஜோ ரூட், ஹாரி புரூக், ஜோஸ் பட்லர்(கே), லியாம் லிவிங்ஸ்டோன், சாம் கரன், கிறிஸ் வோக்ஸ், ஆதில் ரஷித், மார்க் வூட், ரீஸ் டாப்லீ.