ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் போட்டிகள் இந்தியாவில் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. இதில் இன்று நடைபெறும் 20ஆவது லீக் போட்டியில் நடப்பு சாம்பியன் ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணியை எதிர்த்து டெம்பா பவுமா தலைமையிலான தென் ஆப்பிரிக்க அணி விளையாடவுள்ளது.
அதன்படி மும்பை வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள இங்கிலாந்து அணி கேப்டன் ஜோஸ் பட்லர் முதலில் பந்துவீசுவதாக அறிவித்துள்ளார். இன்றைய போட்டிக்கான இங்கிலாந்து அணியில் பென் ஸ்டோக்ஸ், டேவிட் வில்லி, கஸ் அட்கின்ஸன் ஆகியோர் பிளேயிங் லெவனில் இடம்பிடித்துள்ளனர.
அதேசமயம் மறுபக்கம் தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் டெம்பா பவுமா இன்றைய போட்டியில் விளையாடவில்லை. அவருக்கு பதிலாக ரீஸா ஹென்ரிக்ஸ் அணியில் சேர்க்கப்பட்டு, ஐடன் மார்க்ரம் அணியை வழிநடத்துகிறார்.
இரு அணிகளும் தங்களது கடைசி போட்டியில் அதிர்ச்சி தோல்வியைத் தழுவியுள்ளதால் எந்த அணி வெற்றிபெற்று மீண்டும் தங்களது வெற்றி கணக்கை தொடங்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
தென் ஆப்பிரிக்கா: குயின்டன் டி காக், ரீசா ஹென்ட்ரிக்ஸ், ராஸ்ஸி வான் டெர் டுசென், ஐடன் மார்க்ரம்(கே), ஹென்ரிச் கிளாசென், டேவிட் மில்லர், மார்கோ ஜான்சன், ஜெரால்ட் கோட்ஸி, கேசவ் மகாராஜ், ககிசோ ரபாடா, லுங்கி இங்கிடி.
இங்கிலாந்து: ஜானி பேர்ஸ்டோவ், டேவிட் மலான், ஜோ ரூட், பென் ஸ்டோக்ஸ், ஹாரி புரூக், ஜோஷ் பட்லர்(கே), டேவிட் வில்லி, ஆதில் ரஷித், கஸ் அட்கின்சன், மார்க் வூட், ரீஸ் டாப்லி.