ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் நடப்பாண்டு சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. 10 அணிகள் பங்கேற்று விளையாடிய இத்தொடரின் அரையிறுதிச்சுற்றுக்கு இந்தியா, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா மற்று நியூசிலாந்து அணிகள் முன்னேறின. இத்தில் நியூசிலாந்தை வீழ்த்தி இந்திய அணியும், தென் ஆப்பிரிக்க அணியை வீழ்த்தி ஆஸ்திரேலிய அணியும் இறுதிப்போட்டிக்கு முன்னேறின.
இந்நிலையில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான உலகக்கோப்பை இறுதிப்போட்டியானது இன்று அஹ்மதாபாத்திலுள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் கோலாகலமாக நடைபெறவுள்ளது. இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்துள்ளது. இன்றைய போட்டிக்கான இரு அணிகளிலும் எந்த மாற்றங்களும் செய்யப்படவில்லை.
இந்தியா: ரோஹித் சர்மா (கே), ஷுப்மான் கில், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல், சூர்யகுமார் யாதவ், ரவீந்திர ஜடேஜா, முகமது ஷமி, ஜஸ்பிரித் பும்ரா, குல்தீப் யாதவ், முகமது சிராஜ்
ஆஸ்திரேலியா: டிராவிஸ் ஹெட், டேவிட் வார்னர், மிட்செல் மார்ஷ், ஸ்டீவன் ஸ்மித், மார்னஸ் லாபுசாக்னே, க்ளென் மேக்ஸ்வெல், ஜோஷ் இங்கிலிஸ், மிட்செல் ஸ்டார்க், பாட் கம்மின்ஸ்(கே), ஆடம் ஸாம்பா, ஜோஷ் ஹேசில்வுட்