ஐசிசியின் ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் கோலாகமாக நடைபெற்றுவருகிறது. மொத்தம் 10 அணிகள் பங்கெற்றுள்ள இத்தொடரில் எந்த அணி கோப்பையை வென்று புதிய சாம்பியனாக வலம் வரும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அதற்கெற்றவாரு தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, இந்தியா, பாகிஸ்தான் போன்ற அணிகள் அபாரமான வெற்றியைப் பெற்று அசத்தி வருகின்றன.
இந்நிலையில் உலக கிரிக்கெட் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்திருக்கும் இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி இன்று அஹ்மதாபாத்திலுள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. ஆசிய கண்டத்தின் பரம எதிரிகளான இவ்விரு அணிகளும் கிரிக்கெட்டை கௌரவாமாக கருதி வெற்றிக்காக ஆக்ரோசத்துடன் மோதிக் கொள்வார்கள் என்பதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன.
அதன்படி இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பந்துவீசுவதாக அறிவித்துள்ளார். இன்றைய போட்டிக்கான இந்திய அணியில் இஷான் கிஷனுக்கு பதிலாக ஷுப்மன் கில் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். அதேசமயம் பாகிஸ்தான் அணியில் எந்தவொரு மாற்றங்களும் செய்யப்படவில்லை.
இந்தியா: ரோஹித் சர்மா (கே), ஷுப்மான் கில், விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், கேஎல் ராகுல், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ்.
பாகிஸ்தான்: அப்துல்லா ஷபீக், இமாம்-உல்-ஹக், பாபர் அசாம்(கே), முகமது ரிஸ்வான், சௌத் ஷகீல், இஃப்திகார் அகமது, ஷதாப் கான், முகமது நவாஸ், ஹசன் அலி, ஷஹீன் அஃப்ரிடி, ஹாரிஸ் ரவுஃப்.