ஐசிசி உலகக்கோப்பை 2023: டாஸ் வென்றுள்ள நெதர்லாந்து அணி பேட்டிங் தேர்வு!
ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் போட்டிகள் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளன. இதில் இன்று நடைபெறும் 28ஆவது லீக் போட்டியில் ஸ்காட் எட்வர்ட்ஸ் தலைமையிலான நெதர்லாந்து அணியும், ஷாகிப் அல் ஹசன் தலைமையிலான வங்கதேச அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன.
கொல்கத்தாவிலுள்ள ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள நெதர்லாந்து அணி பேட்டிங் செய்வதாக அறிவித்துள்ளது. இன்றைய போட்டிக்கான நெதர்லாந்து அணியில் இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
வங்கதேசம்:…

வங்கதேசம்: தன்ஸித் ஹசன், லிட்டன் தாஸ், நஜ்முல் ஹொசைன் சாண்டோ, ஷாகிப் அல் ஹசன்(கே), முஷ்பிக்கூர் ரஹீம், மஹ்முதுல்லா, மெஹிதி ஹசன் மிராஸ், மஹேதி ஹசன், தஸ்கின் அகமது, முஸ்தாஃபிசூர் ரஹ்மான், ஷோரிபுல் இஸ்லாம்
நெதர்லாந்து: விக்ரம்ஜித் சிங், மேக்ஸ் ஓ'டவுட், வெஸ்லி பாரேசி, காலின் அக்கர்மேன், ஸ்காட் எட்வர்ட்ஸ்(கே), பாஸ் டி லீட், சைப்ரண்ட் ஏங்கல்பிரெக்ட், லோகன் வான் பீக், ஷாரிஸ் அகமது, ஆர்யன் தத், பால் வான் மீகெரென்.