ஐசிசியின் ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. இதில் நாளை நடைபெறும் 11ஆவது லீக் போட்டியில் கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணியும், ஷாகிப் அல் ஹசன் தலைமையிலான வங்கதேசம் அணியும் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் முதலில் பந்துவீசுவதாக அறிவித்துள்ளார். இன்றைய போட்டிகான நியூசிலாந்து அணியில் வில் யங்கிற்கு பதிலாக கேன் வில்லியம்சன் இடம்பிடித்துள்ளார்.
வங்கதேசம் : லிட்டன் தாஸ், தன்ஸித் ஹசன், நஜ்முல் ஹொசைன் சாண்டோ, மெஹிதி ஹசன் மிராஸ், ஷகிப் அல் ஹசன்(கே), முஷ்ஃபிக்கூர் ரஹீம், தவ்ஹித் ஹிரிடோய், மஹ்முதுல்லா, தஸ்கின் அகமது, ஷோரிஃபுல் இஸ்லாம், முஸ்தாஃபிசூர் ரஹ்மான்
நியூசிலாந்து: டெவான் கான்வே, ரச்சின் ரவீந்திரா, கேன் வில்லியம்சன் (கே), டேரில் மிட்செல், டாம் லாதம், கிளென் பிலிப்ஸ், மார்க் சாப்மேன், மிட்செல் சான்ட்னர், மாட் ஹென்றி, லோக்கி ஃபெர்குசன், டிரென்ட் போல்ட்.