ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை தொடரின் லீக் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று பெங்களூருவிலுள்ள சின்னசாமி மைதானத்தில் நடைபெறும் 18ஆவது லீக் போட்டியில் பாட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியும், பாபர் ஆசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணியும் நேருக்கு நேர் மோதவுள்ளன.
இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி கேப்டன் பாபர் ஆசாம் முதலில் பந்துவீசுவதாக அறிவித்துள்ளார். இன்றைய போட்டிகான பாகிஸ்தான் அணியில் ஷதாப் கானுக்கு பதிலாக உசாமா மிர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். அதேசமயம் ஆஸ்திரேலிய அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.
நடப்பு உலகக்கோப்பை தொடரில் கோப்பையை வெல்லும் அணிகளாக பார்க்கப்பட்ட இரு அணிகளும் நேருக்கு நேர மோதவுள்ளதால இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
ஆஸ்திரேலியா: டேவிட் வார்னர், மிட்செல் மார்ஷ், ஸ்டீவன் ஸ்மித், மார்னஸ் லாபுஷாக்னே, ஜோஷ் இங்கிலிஸ், கிளென் மேக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டோய்னிஸ், பாட் கம்மின்ஸ் (கே), மிட்செல் ஸ்டார்க், ஆடம் ஸாம்பா, ஜோஷ் ஹசில்வுட்
பாகிஸ்தான்: அப்துல்லா ஷஃபீக், இமாம்-உல்-ஹக், பாபர் அசாம்(கே), முகமது ரிஸ்வான், சவுத் ஷகீல், இஃப்திகார் அகமது, முகமது நவாஸ், உசாமா மிர், ஹசன் அலி, ஷஹீன் அஃப்ரிடி, ஹாரிஸ் ரவுஃப்