ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக அரங்கேறி வருகிறது. இதில் இன்று நடைபெறும் 15ஆவது லீக் போட்டியில் டெம்பா பவுமா தலைமையிலான தென் ஆப்பிரிக்க அணியும், ஸ்காட் எட்வர்ட்ஸ் தலைமையிலான நெதர்லாந்து அணியும் தர்மசாலாவில் பலப்பரீட்சை நடத்தி வருகிறது.
அதன்படி இப்போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்ரிக்க அணி கேப்டன் டெம்பா பவுமா முதலில் பந்துவீசுவதாக அறிவித்தார். இன்றைய போட்டிக்கான இரு அணிகளிலும் தலா ஒரு மாற்றத்தை கொண்டுவந்துள்ளனர்.
நெதர்லாந்து: விக்ரம்ஜித் சிங், மேக்ஸ் ஓடவுட், காலின் அக்கர்மேன், பாஸ் டி லீட், தேஜா நிடமனுரு, ஸ்காட் எட்வர்ட்ஸ்(கே), சைப்ரண்ட் ஏங்கல்பிரெக்ட், ரோலோஃப் வான் டெர் மெர்வே, லோகன் வான் பீக், ஆர்யன் தத், பால் வான் மீகெரென்
தென் ஆப்பிரிக்கா: குயின்டன் டி காக், டெம்பா பவுமா(கே), ரஸ்ஸி வான் டெர் டுசென், ஐடன் மார்க்ரம், ஹென்ரிச் கிளாசென், டேவிட் மில்லர், மார்கோ ஜான்சன், ககிசோ ரபாடா, கேசவ் மஹாராஜ், லுங்கி இங்கிடி, ஜெரால்ட் கோட்ஸி.