இந்தியாவில் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில், 5 முறை சாம்பியனான ஆஸ்திரேலியா இதுவரையில் விளையாடிய 2 போட்டியிலும் தோல்வியை தழுவியது. இதே போன்று தான் இலங்கை விளையாடிய 2 போட்டிகளிலும் போராடி தோல்வி அடைந்துள்ளது. உலகக் கோப்பைக்கான அரையிறுதிப் போட்டிக்கு புள்ளிப்பட்டியலில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் தான் முன்னேறும்.
இந்த நிலையில் தான் புள்ளிப்பட்டியலில் 10ஆவது இடத்தில் உள்ள ஆஸ்திரேலியாவும், புள்ளிப்பட்டியலில் 8ஆவது இடத்தில் உள்ள இலங்கையும் இன்றைய போட்டியில் மோதுகின்றன. இதில் காயம் காரணமாக இலங்கை அணியின் கேப்டன் தசுன் ஷனகா தொடரிலிருந்து விலகியுள்ளதால் குசால் மெண்டிஸ் அணியை வழிநடத்துகிறார்.
லக்னோவிலுள்ள ஏக்னா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள இலங்கை அணி கேப்டன் குசால் மெண்டிஸ் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்துள்ளார். இன்றைய போட்டிக்கான இலங்கை அணியில் ஷனகா, பதிரானா ஆகியோருக்கு பதிலாக சமிகா கருணரத்னே, லஹிரு குமாரா அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இலங்கை: பதும் நிஷங்கா, குசல் பெரேரா, குசல் மெண்டிஸ்(கே), சதீர சமரவிக்ரம, சரித் அசலங்க, தனஞ்சய டி சில்வா, சாமிக்க கருணாரத்னே, துனித் வெல்லாலகே, மஹீஷ் தீக்ஷனா, லஹிரு குமார, தில்ஷன் மதுஷங்கா.
ஆஸ்திரேலியா: மிட்செல் மார்ஷ், டேவிட் வார்னர், ஸ்டீவன் ஸ்மித், மார்னஸ் லாபுசாக்னே, ஜோஷ் இங்கிலிஸ், கிளென் மேக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டோய்னிஸ், மிட்செல் ஸ்டார்க், பாட் கம்மின்ஸ்(கே), ஆடம் ஸாம்பா, ஜோஷ் ஹசில்வுட்.