ஐசிசி யு19 உலகக்கோப்பை: டாஸ் வென்றுள்ள இந்திய அணி பந்துவீச்சு!
அண்டர்19 வீரர்களுக்கான ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெறும் முதல் அரையிறுதிப்போட்டியில் இந்திய அண்டர் 19 அணியை எதிர்த்து தென் ஆப்பிரிக்க அண்டர் 19 அணி பலப்பரீட்சை நடத்துகிறது.
பெனோனியில் உள்ள வில்லோமூர் பார்க் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள இந்திய அண்டர் 19 அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்துள்ளது. இத்தொடரில் தோல்வியையே சந்திக்காத இந்திய அணி அரையிறுதில் வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறும்…
அண்டர்19 வீரர்களுக்கான ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெறும் முதல் அரையிறுதிப்போட்டியில் இந்திய அண்டர் 19 அணியை எதிர்த்து தென் ஆப்பிரிக்க அண்டர் 19 அணி பலப்பரீட்சை நடத்துகிறது.
பெனோனியில் உள்ள வில்லோமூர் பார்க் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள இந்திய அண்டர் 19 அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்துள்ளது. இத்தொடரில் தோல்வியையே சந்திக்காத இந்திய அணி அரையிறுதில் வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறும் முனைப்பில் உள்ளதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.
இந்தியா யு19 அணி: ஆதர்ஷ் சிங், அர்ஷின் குல்கர்னி, முஷீர் கான், உதய் சஹாரன் (கே), பிரியன்ஷு மோலியா, ஆரவெல்லி அவனிஷ், சச்சின் தாஸ், முருகன் அபிஷேக், ராஜ் லிம்பானி, சௌமி பாண்டே, நமன் திவாரி
தென் ஆப்பிரிக்க யு19 அணி: லுவான்-ட்ரே பிரிட்டோரியஸ், ஸ்டீவ் ஸ்டோக், டேவிட் டீகர், ரிச்சர்ட் செலெட்ஸ்வான், திவான் மரைஸ், ஆலிவர் வைட்ஹெட், ஜுவான் ஜேம்ஸ் (கே), ரிலே நார்டன், டிரிஸ்டன் லூஸ், நகோபானி மொகோனா, குவேனா மபாகா