ஐஎல்டி20 2024: டாஸ் வென்றுள்ள அபுதாபி நைட் ரைடர்ஸ் அணி பந்துவீச்சு!
ஐஎல்டி20 லீக் தொடரின் இரண்டாவது சீசன் ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெறும் 16ஆவது லீக் ஆட்டத்தில் அபுதாபி நைட் ரைடர்ஸ் மற்றும் கல்ஃப் ஜெயண்ட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
அபுதாபியிலுள்ள ஷேக் சயீத் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள அபுதாபி நைட் ரைடர்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்துள்ளது. இரு அணிகளிலும் அதிரடி வீரர்கள் இருப்பதால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும்…
ஐஎல்டி20 லீக் தொடரின் இரண்டாவது சீசன் ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெறும் 16ஆவது லீக் ஆட்டத்தில் அபுதாபி நைட் ரைடர்ஸ் மற்றும் கல்ஃப் ஜெயண்ட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
அபுதாபியிலுள்ள ஷேக் சயீத் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள அபுதாபி நைட் ரைடர்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்துள்ளது. இரு அணிகளிலும் அதிரடி வீரர்கள் இருப்பதால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
அபுதாபி நைட் ரைடர்ஸ்: அலிஷன் ஷராபு, மைக்கேல்-கைல் பெப்பர், சாம் ஹைன், ஆண்ட்ரே ரஸல், லௌரி எவன்ஸ், சாகர் கல்யாண், இமாத் வாசிம், சுனில் நரைன்(கே), டேவிட் வில்லி, மார்கண்ட் டி லாங்கே, அலி கான்
கல்ஃப் ஜெயண்ட்ஸ்: ஜேமி ஸ்மித், ஜேம்ஸ் வின்ஸ்(கே), கிறிஸ் லின், ஜோர்டான் காக்ஸ், உஸ்மான் கான், ஷிம்ரான் ஹெட்மையர், கார்லோஸ் பிராத்வைட், ஜேமி ஓவர்டன், டொமினிக் டிரேக்ஸ், முஜீப் உர் ரஹ்மான், ஜுஹைப் ஜுபைர்.