ஐஎல்டி20 2024: டாஸ் வென்றுள்ள அபுதாபி நைட் ரைடர்ஸ் அணி பந்துவீச்சு!
ஐஎல்டி20 லீக் தொடரின் இரண்டாவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெறும் 23ஆவது லீக் ஆட்டத்தில் ஷார்ஜா வாரியர்ஸ் - அபுதாபி நைட்ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ஷார்ஜா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள அபுதாபி நைட் ரைடர்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்துள்ளது.
இப்போட்டியில் அபுதாபி நைட் ரைடர்ஸ் அணி வெற்றிபெறும் நிலையில் குவாலிஃபையர் சுற்றுக்கு முன்னேறும், அதேசயம் ஷார்ஜா வாரியர்ஸ் அணி இப்போட்டியில்…
ஐஎல்டி20 லீக் தொடரின் இரண்டாவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெறும் 23ஆவது லீக் ஆட்டத்தில் ஷார்ஜா வாரியர்ஸ் - அபுதாபி நைட்ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ஷார்ஜா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள அபுதாபி நைட் ரைடர்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்துள்ளது.
இப்போட்டியில் அபுதாபி நைட் ரைடர்ஸ் அணி வெற்றிபெறும் நிலையில் குவாலிஃபையர் சுற்றுக்கு முன்னேறும், அதேசயம் ஷார்ஜா வாரியர்ஸ் அணி இப்போட்டியில் வெற்றிபெற்றால் மட்டுமே குவாலிஃபையர் சுற்றுக்கான வாய்ப்பை தக்கவைக்கும் என்பதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
அபுதாபி நைட் ரைடர்ஸ்: மைக்கேல்-கைல் பெப்பர், அலிஷன் ஷராஃபு, சாம் ஹைன், லௌரி எவன்ஸ், ரவி போபாரா, ஆண்ட்ரே ரஸல்(கே), இமாத் வசிம், டேவிட் வில்லி, ஜோசுவா லிட்டில், ஆதித்யா ஷெட்டி, அலி கான்
ஷார்ஜா வாரியர்ஸ்: நிரோஷன் டிக்வெல்லா, ஜான்சன் சார்லஸ், ஜோ டென்லி, டாம் கொஹ்லர்-காட்மோர்(கே), லியாம் லிவிங்ஸ்டோன், சீன் வில்லியம்ஸ், டேனியல் சம்ஸ், மஹீஷ் தீக்ஷனா, முஹ்மத் ஜவதுல்லா, ஆதில் ரஷித், ஜுனைத் சித்திக்.