ஐஎல்டி20 2024: டாஸ் வென்றுள்ள துபாய் கேப்பிட்டல்ஸ் பேட்டிங்!
ஐஎல்டி20 லீக் தொடரின் 2ஆவது வீசன் ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெறும் 14ஆவது லீக் ஆட்டத்தில் துபாய் கேப்பிட்டல்ஸ் - ஷார்ஜா வாரியர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றனர்.
இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள துபாய் கேப்பிட்டல்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்துள்ளது. இதுக்கு முன் இரு அணிகளுக்கும் இடையே நடைபெற்ற போட்டியில் ஷார்ஜா வாரியர்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. தற்போது…
ஐஎல்டி20 லீக் தொடரின் 2ஆவது வீசன் ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெறும் 14ஆவது லீக் ஆட்டத்தில் துபாய் கேப்பிட்டல்ஸ் - ஷார்ஜா வாரியர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றனர்.
இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள துபாய் கேப்பிட்டல்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்துள்ளது. இதுக்கு முன் இரு அணிகளுக்கும் இடையே நடைபெற்ற போட்டியில் ஷார்ஜா வாரியர்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. தற்போது அதற்கு பதிலடி கொடுக்கும் முனைப்பில் துபாய் கேப்பிட்டல்ஸ் அணி விளையாடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஷார்ஜா வாரியர்ஸ் : ஜான்சன் சார்லஸ், நிரோஷன் டிக்வெல்லா, டாம் கோஹ்லர்-காட்மோர்(கே), ஜோ டென்லி, லூயிஸ் கிரிகோரி, பசில் ஹமீத், டேனியல் சம்ஸ், கிறிஸ் வோக்ஸ், மஹீஷ் தீக்ஷனா, முகமது ஜவதுல்லா, மார்க் வாட்
துபாய் கேப்பிட்டல்ஸ்: ரஹ்மானுல்லா குர்பாஸ், டேவிட் வார்னர்(கே), பென் டங்க், மேக்ஸ் ஹோல்டன், சாம் பில்லிங்ஸ், சிக்கந்தர் ரஸா, ரோவ்மேன் பாவெல், ஜேசன் ஹோல்டர், ரோலோஃப் வான்டெர் மெர்வே, அகிஃப் ராஜா, ஹைதர் அலி.