ஐஎல்டி20 2024: டாஸ் வென்றுள்ள துபாய் கேப்பிட்டல்ஸ் அணி பந்துவீச்சு!
இன்டர்நேஷனல் லீக் டி20 கிரிக்கெட் தொடரின் இரண்டாவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெறும் 17ஆவது லீக் ஆட்டத்தில் துபாய் கேப்பிட்டல்ஸ் - டெஸர்ட் வைப்பர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள துபாய் கேப்பிட்டல்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்துள்ளது.
துபாய் கேப்பிட்டல்ஸ் அணி ஏற்கெனவெ விளையாடிய 5 போட்டிகளில் 2 இல் மட்டுமே வெற்றிபெற்றுள்ளது. அதேசமயம்…
இன்டர்நேஷனல் லீக் டி20 கிரிக்கெட் தொடரின் இரண்டாவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெறும் 17ஆவது லீக் ஆட்டத்தில் துபாய் கேப்பிட்டல்ஸ் - டெஸர்ட் வைப்பர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள துபாய் கேப்பிட்டல்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்துள்ளது.
துபாய் கேப்பிட்டல்ஸ் அணி ஏற்கெனவெ விளையாடிய 5 போட்டிகளில் 2 இல் மட்டுமே வெற்றிபெற்றுள்ளது. அதேசமயம் டெஸர்ட் வைப்பர்ஸ் அணியும் விளையாடிய 5 போட்டிகளில் 2 வெற்றிகளை பெற்றுள்ளது. இதனால் புள்ளிப்பட்டியலின் கடைசி இரண்டு இடங்களில் உள்ள அணிகள் நேருக்கு நேர மோதவுள்ளதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளது.
துபாய் கேப்பிட்டல்ஸ்: ரஹ்மானுல்லா குர்பாஸ், டேவிட் வார்னர்(கே), சாம் பில்லிங்ஸ், சிக்கந்தர் ரஸா, ரோவ்மன் பவல், ஜேசன் ஹோல்டர், ராகுல் சோப்ரா, ரோலோஃப் வான் டெர் மெர்வே, ஸ்காட் குகெலிஜின், துஷ்மந்த சமீரா, அகிஃப் ராஜா.
டெஸர்ட் வைப்பர்ஸ்: ரோஹன் முஸ்தபா, அலெக்ஸ் ஹேல்ஸ், காலின் முன்ரோ(கே), ஆடம் ஹோஸ், வனிந்து ஹசரங்கா, ஆசம் கான், ஷெர்பேன் ரூதர்ஃபோர்ட், அலி நசீர், ஷஹீன் அஃப்ரிடி, லூக் வூட், முகமது அமீர்