ஐஎல்டி20 2024 எலிமினேட்டர்: டாஸ் வென்றுள்ள அபுதாபி நைட் ரைடர்ஸ் அணி பந்துவீச்சு!
ஐஎல்டி20 என்றழைக்கப்படும் இன்டர்நேஷனல் லீக் டி20 தொடரின் இரண்டாவது சீசன் தற்போது இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. லீக் சுற்றின் முடிவில் மும்பை இந்தியன்ஸ் எமிரேட்ஸ், கல்ஃப் ஜெயண்ட்ஸ், துபாய் கேப்பிட்டல்ஸ் மற்றும் அபுதாபி நைட் ரைடர்ஸ் அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறின. இந்நிலையில் இத்தொடரின் எலிமினேட்டர் சுற்று ஆட்டம் இன்று நடைபெறுகிறது.
அபுதாபியில் நடைபெறும் இப்போட்டியில் புள்ளிப்பட்டியளின் 3ஆம் இடத்தை பிடித்த அபுதாபி நைட் ரைடர்ஸ் அணியை எதிர்த்து, நான்காம்…
ஐஎல்டி20 என்றழைக்கப்படும் இன்டர்நேஷனல் லீக் டி20 தொடரின் இரண்டாவது சீசன் தற்போது இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. லீக் சுற்றின் முடிவில் மும்பை இந்தியன்ஸ் எமிரேட்ஸ், கல்ஃப் ஜெயண்ட்ஸ், துபாய் கேப்பிட்டல்ஸ் மற்றும் அபுதாபி நைட் ரைடர்ஸ் அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறின. இந்நிலையில் இத்தொடரின் எலிமினேட்டர் சுற்று ஆட்டம் இன்று நடைபெறுகிறது.
அபுதாபியில் நடைபெறும் இப்போட்டியில் புள்ளிப்பட்டியளின் 3ஆம் இடத்தை பிடித்த அபுதாபி நைட் ரைடர்ஸ் அணியை எதிர்த்து, நான்காம் இடத்தை பிடித்துள்ள துபாய் கேப்பிட்டல்ஸ் அணி விளையாடுகின்றன. இந்நிலையில் இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள அபுதாபி நைட் ரைடர்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்துள்ளது. இரு அணிகளிலும் ஆதிரடி வீரர்கள் இருப்பதால இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளது.
துபாய் கேப்பிட்டல்ஸ்: டாம் பான்டன், மேக்ஸ் ஹோல்டன், லூயூஸ் டு ப்ளூய், டாம் ஆபெல், சாம் பில்லிங்ஸ்(கே), சிக்கந்தர் ரஸா, தசுன் ஷனகா, அகிஃப் ராஜா, ஒல்லி ஸ்டோன், ஸ்காட் குகெலிஜன், ஹைதர் அலி.
அபுதாபி நைட் ரைடர்ஸ்: ஜேசன் ராய், மைக்கேல்-கைல் பெப்பர், அலிஷன் ஷரஃபு, சாம் ஹெயின், லாரி எவன்ஸ், சபீர் அலி, ரவி போபாரா, ஃபேபியன் ஆலன், டேவிட் வில்லி, சுனில் நரைன்(கே), ஜோஷுவா லிட்டில்