ஐஎல்டி20 2024 இறுதிப்போட்டி: டாஸ் வென்றுள்ள துபாய் கேப்பிட்டல்ஸ் அணி பந்துவீச்சு!
ஐஎல்டி20 என்றழைக்கப்படும் இன்டர்நேஷனல் லீக் டி20 தொடரின் இரண்டாவது சீசன் தற்போது இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. இத்தொடரின் பிளே ஆஃப் சுற்று முடிவில் மும்பை இந்தியன்ஸ் எமிரேட்ஸ் மற்றும் துபாய் கேப்பிட்டல்ஸ் அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறின. இந்நிலையில் இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் இந்த இரு அணிகளும் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள துயாப் கேப்பிட்டல்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்து மும்பை இந்தியன்ஸ் எமிரேட்ஸ்…
ஐஎல்டி20 என்றழைக்கப்படும் இன்டர்நேஷனல் லீக் டி20 தொடரின் இரண்டாவது சீசன் தற்போது இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. இத்தொடரின் பிளே ஆஃப் சுற்று முடிவில் மும்பை இந்தியன்ஸ் எமிரேட்ஸ் மற்றும் துபாய் கேப்பிட்டல்ஸ் அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறின. இந்நிலையில் இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் இந்த இரு அணிகளும் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள துயாப் கேப்பிட்டல்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்து மும்பை இந்தியன்ஸ் எமிரேட்ஸ் அணியை பேட்டிங் செய்ய அழைத்துள்ளது. இப்போட்டியில் வெற்றிபெறும் அணி முதல் முறையாக ஐஎல்டி20 தொடரில் சாம்பியன் பட்டத்தை வெல்லும் என்பதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளன.
மும்பை இந்தியன்ஸ் எமிரேட்ஸ் : முகமது வசீம், ஆண்ட்ரே ஃபிளெட்சர், நிக்கோலஸ் பூரன்(கே), டுவைன் பிராவோ, பானுகா ராஜபக்சே, குசல் பெரேரா, கீரன் பொல்லார்ட், அகீல் ஹொசைன், டிரெண்ட் போல்ட், முஹம்மது ரோஹித் கான், வக்கார் சலாம்கெயில்
துபாய் கேப்பிட்டல்ஸ்: லூயிஸ் டு ப்ளூய், டாம் ஆபெல், சாம் பில்லிங்ஸ்(கே), ரோவ்மேன் பவல், சிக்கந்தர் ரஸா, ஸ்காட் குகெலிஜன், ஜேசன் ஹோல்டர், ராகுல் சோப்ரா, ஒல்லி ஸ்டோன், ஹைதர் அலி, ஜாஹிர் கான்.