ஐஎல்டி20 2024 குவாலிஃபையர்: கல்ஃப் ஜெயண்ட்ஸ் அணி பந்துவீச்சு; இறுதிப்போட்டிக்கு முன்னேறுவது யார்?
ஐஎல்டி20 என்றழைக்கப்படும் இன்டர்நேஷனல் லீக் டி20 தொடரின் இரண்டாவது சீசன் தற்போது இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. இத்தொடரின் முதல் குவாலிஃபையர் ஆட்டம் இன்று நடைபெறுகிறது. இதில் புள்ளிப்பட்டியளின் முதலிரண்டு இடங்கைப் பிடித்த முமபை இந்தியன்ஸ் எமிரேட்ஸ் மற்றும் கல்ஃப் ஜெயண்ட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றனர்.
துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள கல்ஃப் ஜெயண்ட்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்துள்ளது. இப்போட்டியில் வெற்றிபெறும் அணி ஐஎல்டி20 தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறும் என்பதால்…
ஐஎல்டி20 என்றழைக்கப்படும் இன்டர்நேஷனல் லீக் டி20 தொடரின் இரண்டாவது சீசன் தற்போது இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. இத்தொடரின் முதல் குவாலிஃபையர் ஆட்டம் இன்று நடைபெறுகிறது. இதில் புள்ளிப்பட்டியளின் முதலிரண்டு இடங்கைப் பிடித்த முமபை இந்தியன்ஸ் எமிரேட்ஸ் மற்றும் கல்ஃப் ஜெயண்ட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றனர்.
துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள கல்ஃப் ஜெயண்ட்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்துள்ளது. இப்போட்டியில் வெற்றிபெறும் அணி ஐஎல்டி20 தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறும் என்பதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளது.
கல்ஃப் ஜயண்ட்ஸ்: ஜேம்ஸ் வின்ஸ்(கே), ஜோர்டான் காக்ஸ், ஷிம்ரான் ஹெட்மையர், ஜேமி ஸ்மித், உஸ்மான் கான், லியாம் டௌசன், ஜேமி ஓவர்டன், கிறிஸ் ஜோர்டான், ஜுஹைப் ஜுபைர், டேனியல் வோரால், பிளெஸ்ஸிங் முசரபானி.
மும்பை இந்தியன்ஸ் எமிரேட்ஸ்: முகமது வசீம், ஆண்ட்ரே ஃபிளெட்சர், குசல் பெரேரா, நிக்கோலஸ் பூரன்(கே), டிம் டேவிட், கீரன் பொல்லார்ட், டுவைன் பிராவோ, அகீல் ஹொசைன், முகமது ரோஹித் கான், வக்கார் சலாம்கெயில், டிரென்ட் போல்ட்.