ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றுவரும் முதல் சீசன் இன்டர்நேஷ்னல் லீக் டி20 தொடர் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. இதில் இன்று நடைபெறும் 17ஆவது லீக் ஆட்டத்தில் ஷார்ஜா வாரியர்ஸ் - துபாய் கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
இப்போட்டியில் டாஸ் வென்ற ஷார்ஜா வாரியர்ஸ் அணியின் கேப்டன் ஜோ டென்லி முதலில் பந்துவீசுவதாக அறிவித்துள்ளார். இந்நிலையில் மழை காரணமாக இப்போட்டி தாமதமாகியுள்ளது.
துபாய் கேப்பிட்டல்ஸ்: ரோவ்மன் பவல்(கே), பானுகா ராஜபக்சே, ஹஸ்ரதுல்லா ஜசாய், டேனியல் லாரன்ஸ், யூசுப் பதான், சிக்கந்தர் ராசா, தசுன் ஷனகா, ஹஸ்ரத் லுக்மான், அகிஃப் ராஜா, பிரெட் கிளாசென், ஜேக் பால்
ஷார்ஜா வாரியர்ஸ்: ரஹ்மானுல்லா குர்பாஸ், எவின் லூயிஸ், டாம் கோலர்-காட்மோர், ஜோ டென்லி(கே), முஹம்மது ஜவதுல்லா, ஆடம் ஹோஸ், முகமது நபி, பால் வால்டர், நூர் அகமது, ஜுனைத் சித்திக், நவீன்-உல்-ஹக்.