இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான முதல் டி20 ஆட்டம் கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.
இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரராக ரோஹித் சர்மாவுடன் இஷான் கிஷன் களமிறங்குகிறார். ரவி பிஷ்னாய் அறிமுக ஆட்டக்காரராகக் களமிறங்குகிறார்.
காயம் காரணமாக கடைசி 2 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடாத கேப்டன் கீரன் பொல்லார்ட் டி20யில் அணிக்குத் திரும்பியுள்ளார்.
வெஸ்ட் இண்டீஸ்: பிராண்டன் கிங், கைல் மேயர்ஸ், நிக்கோலஸ் பூரன், ரோவ்மேன் பவல், கீரன் பொல்லார்ட்(கே), ரோஸ்டன் சேஸ், ரொமாரியோ ஷெப்பர்ட், அகீல் ஹொசைன், ஒடியன் ஸ்மித், ஃபேபியன் ஆலன், ஷெல்டன் காட்ரெல்.
இந்திய அணி: இஷான் கிஷன், ரோஹித் சர்மா (கே), விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ரிஷப் பந்த், வெங்கடேஷ் ஐயர், தீபக் சஹார், புவனேஷ்வர் குமார், ஹர்ஷல் படேல், ரவி பிஷ்னாய், யுஸ்வேந்திர சஹால்.