வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் வரும் ஜூன் மாதம் நடைபெற உள்ள 2024 டி20 உலகக் கோப்பைக்கு தயாராவதற்காக இந்திய கிரிக்கெட் அணி தங்களுடைய சொந்த மண்ணில் ஆஃப்கானிஸ்தானுக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட உள்ளது. அதன்படி இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டி20 போட்டி இன்று மொஹாலியில் நடைபெறுகிறது.
இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பந்துவீசுவதாக அறிவித்துள்ளார். இன்றைய போட்டிக்கான இந்திய அணியில் ஏற்கெனவே விராட் கோலி விளையாடாத நிலையில், சஞ்சு சாம்சன், குல்தீப் யாதவ், யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஆவேஷ்கான் ஆகியோருக்கும் பிளேயிங் லெவனில் வாய்ப்பு வழங்கப்படவில்லை.
ஆஃப்கானிஸ்தான்: ரஹ்மானுல்லா குர்பாஸ், இப்ராஹிம் ஸத்ரான்(கே), ரஹ்மத் ஷா, அஸ்மத்துல்லா உமர்சாய், முகமது நபி, நஜிபுல்லா ஸத்ரான், கரீம் ஜானத், குல்பதின் நைப், ஃபசல்ஹாக் ஃபரூக்கி, நவீன்-உல் ஹஜ், முஜீப் உர் ரஹ்மான்.
இந்தியா: ரோஹித் சர்மா(கே), ஷுப்மான் கில், திலக் வர்மா, ஷிவம் துபே, ஜித்தேஷ் சர்மா, ரிங்கு சிங், அக்ஸர் படேல், வாஷிங்டன் சுந்தர், ரவி பிஷ்னோய், அர்ஷ்தீப் சிங், முகேஷ் குமார்.