இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் மூன்று ஆட்டம் கொண்ட ஒருநாள் போட்டி தொடரில் நேற்று மும்பையில் நடந்த முதல் ஆட்டத்தில் இந்தியா 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இந்நிலையில் இரு அணிகளும் மோதும் 2ஆவது ஒருநாள் போட்டி இன்று ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் நடக்கிறது.
இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார். இன்றைய போட்டிக்கான ஆஸ்திரேலிய அணியில் கிளென் மேக்ஸ், ஜோஷ் இங்லிஸ் ஆகியோருக்கு பதிலாக நாதன் எல்லிஸ், அலெக்ஸ் கேரி ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்திய அணியில் இஷான் கிஷான் நீக்கப்பட்டு, கேப்டன் ரோஹித் சர்மாவும், ஷர்தூல் தாக்கூருக்கு பதிலாக அக்ஸர் படேலும் அணியில் இணைந்துள்ளனர்.
இந்தியா: ரோஹித் சர்மா (கே), ஷுப்மான் கில், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், கே.எல். ராகுல், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், குல்தீப் யாதவ், முகமது சிராஜ், முகமது ஷமி.
ஆஸ்திரேலியா: டிராவிஸ் ஹெட், மிட்செல் மார்ஷ், ஸ்டீவன் ஸ்மித்(கே), மார்னஸ் லாபுஷாக்னே, அலெக்ஸ் கேரி, கேமரூன் கிரீன், மார்கஸ் ஸ்டோனிஸ், சீன் அபோட், நாதன் எல்லிஸ், மிட்செல் ஸ்டார்க், ஆடம் ஸாம்பா.