உலகக் கோப்பை தொடருக்கு முன்னதாக ஆஸ்திரேலிய அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் அடங்கிய ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடுகிறது. இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றிபெற்று 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலைப் பெற்றுள்ளது.
இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது ஒருநாள் இன்று இந்தூரில் நடைபெறுகிறது. இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீசுவதாக தீர்மானித்துள்ளது. மேலும் இன்றைய போட்டிக்கான ஆஸ்திரேலிய அணியில் பாட் கம்மின்ஸ் இடம்பெறாத காரணத்தால் ஸ்டீவ் ஸ்மித் அணியை வழிநடத்துகிறார்.
அதேசமயம் ஆஸ்திரேலிய அணியில் மிட்செல் மார்ஷ், பாட் கம்மின்ஸ், மார்கஸ் ஸ்டொய்னிஸ் ஆகியோருக்கு ஓய்வளிக்கப்பட்டு ஜோஷ் ஹசில்வுட், அலெக்ஸ் கேரி, அறிமுக வீரர் ஸ்பென்ஸர் ஜான்சன் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்திய அணியில் ஜஸ்ப்ரித் பும்ராவுக்கு ஓய்வளிக்கப்பட்டு பிரஷித் கிருஷ்ணா ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியா: டேவிட் வார்னர், மேத்யூ ஷார்ட், ஸ்டீவன் ஸ்மித் (கே), மார்னஸ் லாபுஷாக்னே, ஜோஷ் இங்கிலிஸ், அலெக்ஸ் கேரி, கேமரூன் கிரீன், சீன் அபோட், ஆடம் ஸாம்பா, ஜோஷ் ஹேசில்வுட், ஸ்பென்சர் ஜான்சன்
இந்தியா: ஷுப்மான் கில், ருதுராஜ் கெய்க்வாட், ஷ்ரேயாஸ் ஐயர், கேஎல் ராகுல், இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ், ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஷ்வின், ஷர்துல் தாக்கூர், முகமது ஷமி, பிரசித் கிருஷ்ணா.