இந்தியாவுக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் ஆஸ்திரேலிய அணி விளையாடி வருகிறது. இதில் இதுவரை நடைபெற்று முடிந்த 3 போட்டிகளில் இந்திய அணி இரண்டிலும், ஆஸ்திரேலிய அணி ஒரு போட்டியிலும் வெற்றிபெற்று 2-1 என்ற கணக்கில் தொடரில் நீடிக்கின்றன.
இந்நிலையில் இத்தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் நான்காவது டி20 போட்டி இன்று நடைபெறுகிறது. ராய்ப்பூரில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள ஆஸ்திரேலிய அணி கேப்டன் மேத்யூ வேட் முதலில் பந்துவீசுவதாக அறிவித்துள்ளார்.
இன்றைய போட்டிக்கான இந்திய அணியில் பிரஷித் கிருஷ்ணா, இஷான் கிஷன், அர்ஷ்தீப் சிங், திலக் வர்மா ஆகியோருக்கு பதிலாக முகேஷ் குமார், தீபக் சஹார், ஜித்தேஷ் சர்மா, ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
மறுபக்கம் ஆஸ்திரேலிய அணியில் மார்கஸ் ஸ்டொய்னிஸ், கிளென் மேக்ஸ்வெல், ஜோஷ் இங்க்லிஸ், கென் ரிச்சர்ட்சன், நாதன் எல்லிஸ் ஆகியோருக்கு பதிலாக மேத்யூ ஷார்ட், பென் மெக்டர்மோட், ஜோஷ் பிலீப், கிறிஸ் க்ரீன், பென் துவார்ஷுயிஸ், தன்வீர் சங்கா ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
ஆஸ்திரேலியா: ஜோஷ் பிலிப், டிராவிஸ் ஹெட், பென் மெக்டெர்மாட், ஆரோன் ஹார்டி, டிம் டேவிட், மேத்யூ ஷார்ட், மேத்யூ வேட்(கே), பென் துவார்ஷூயிஸ், கிறிஸ் கிரீன், ஜேசன் பெஹ்ரன்டோர்ஃப், தன்வீர் சங்கா.
இந்தியா : யஷஸ்வி ஜெய்ஸ்வால், ருதுராஜ் கெய்க்வாட், ஸ்ரேயாஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ்(கே), ஜிதேஷ் சர்மா, ரின்கு சிங், அக்சர் படேல், ரவி பிஷ்னோய், தீபக் சாஹர், அவேஷ் கான், முகேஷ் குமார்.