இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் முடிவடைந்துள்ள நிலையில், இரு அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரானது நடைபெற்று வருகிறது. அதன்படி இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதல் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று 1-0 என்ற கணக்கில் தொடரிலும் முன்னிலைப்பெற்று அசத்தியது.
இந்நிலையில் இத்தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையேயன இரண்டாவது டி20 போட்டியானது டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி கிரிக்கெட் மைதானத்தில் இன்று நடைபெறவுள்ளது. இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள வங்கதேச அணி கேப்டன் நஜ்முல் ஹொசைன் சாண்டோ முதலில் பந்துவீசுவதாக அறிவித்ததுடன் இந்திய அணியை பேட்டிங் செய்ய அழைத்துள்ளது.
இன்றைய போட்டிக்கான வங்கதேச அணியில் ஷொரிஃபுல் இஸ்லாமிற்கு பதிலாக தன்ஸிம் ஹசன் ஷாகிப் இடம்பிடித்துள்ளார். அதேசமயம் இந்திய அணியைப் பொறுத்தவரையில் எந்த மாற்றங்களும் செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இரு அணிகளிலும் அதிரடியான வீரர்கள் இடம்பிடித்திருப்பதால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
இந்தியா பிளேயிங் லெவன்: அபிஷேக் சர்மா, சஞ்சு சாம்சன், சூர்யகுமார் யாதவ்(கே), நிதிஷ் ரெட்டி, ஹர்திக் பாண்டியா, ரியான் பராக், ரிங்கு சிங், வாஷிங்டன் சுந்தர், வருண் சக்ரவர்த்தி, அர்ஷ்தீப் சிங், மயங்க் யாதவ்
வங்கதேச பிளேயிங் லெவன்: லிட்டன் தாஸ், நஜ்முல் ஹொசைன் சாண்டோ(கே), பர்வேஸ் ஹொசைன் எமன், தவ்ஹித் ஹிரிடோய், மஹ்முதுல்லா, ஜக்கர் அலி, மெஹிதி ஹசன் மிராஸ், ரிஷாத் ஹொசைன், தஸ்கின் அகமது, முஸ்தாஃபிசூர் ரஹ்மான், தன்ஸிம் ஹசன் ஷாகிப்.