இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் முடிவடைந்துள்ள நிலையில், இரு அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரானது நடைபெற்று வருகிறது. அதன்படி நடைபெற்று வரும் டி20 தொடரின் முதலிரண்டு போட்டிகளின் முடிவில் இந்திய அணி இரண்டு போட்டியிலும் இந்திய அணி வெற்றிபெற்று தொடரை வென்றுள்ளது.
இந்நிலையில் இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையேயன மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டியானது ஹைதராபாத்தில் உள்ள ராஜிவ் காந்தி கிரிக்கெட் மைதானத்தில் நாளை நடைபெறவுள்ளது. இப்போட்டியில் டாஸ்வ் வென்றுள்ள இந்திய அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து வங்கதேச அணியை பந்துவீச அழைத்துள்ளது. இன்றைய போட்டிக்கான இந்திய அணியில் ரவி பிஷ்னோய்க்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இந்தியா: சஞ்சு சாம்சன், அபிஷேக் சர்மா, சூர்யகுமார் யாதவ்(கே), நிதிஷ் ரெட்டி, ஹர்திக் பாண்டியா, ரியான் பராக், ரின்கு சிங், வாஷிங்டன் சுந்தர், வருண் சக்கரவர்த்தி, ரவி பிஷ்னோய், மயங்க் யாதவ்
வங்கதேசம்: பர்வேஸ் ஹொசைன் எமன், லிட்டன் தாஸ், நஜ்முல் ஹொசைன் சாண்டோ(கே), தன்சித் ஹசன், தவ்ஹித் ஹிரிடோய், மஹ்முதுல்லா, மஹேதி ஹசன், தஸ்கின் அகமது, ரிஷாத் ஹொசைன், முஸ்தாபிசுர் ரஹ்மான், தஞ்சிம் ஹசன்