இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடர் தற்சமயம் நடைபெற்று வருகிறது. இதில் நடந்து முடிந்த முதலிரண்டு டி20 போட்டிகளின் முடிவிலும் இந்திய அணியானது அடுத்தடுத்து வெற்றிகளைப் பதிவுசெய்து அசத்தியதுடன், இத்தொடரிலும் 2-0 என்ற கணக்கில் முன்னிலைப் பெற்று அசத்தியுள்ளது.
இதனையடுத்து இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான டி20 தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் மூன்றாவது டி20 போட்டி இன்று (ஜனவரி 28) ராஜ்கோட்டில் உள்ள நிரஞ்சன் ஷா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் யாதவ் முதலில் பந்துவீசுவதாக அறிவித்துள்ளார். இன்றைய போட்டிக்கான இந்திய அணியில் அர்ஷ்தீப் சிங்கிற்கு ஓய்வளிக்கப்பட்டு முகமது ஷமி பிளேயிங் லெவனில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இங்கிலாந்து அணியைப் பொறுத்தவரையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. இதில் இந்திய அணி ஏற்கெனவே முதலிரண்டு போட்டியில் வென்றுள்ள உத்வேகத்துடன் இப்போட்டியை எதிர்கொள்ளவுள்ளது. மறுபக்கம் முந்தைய தோல்விகளுக்கு பதிலடி கொடுக்கும் முனைப்பில் இங்கிலாந்து அணி இப்போட்டியில் விளையாடவுள்ளது. இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
இந்தியா பிளேயிங் லெவன்: அபிஷேக் சர்மா, சஞ்சு சாம்சன், திலக் வர்மா, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, துருவ் ஜூரெல், அக்ஸர் படேல், வாஷிங்டன் சுந்தர், வருண் சக்ரவர்த்தி, முகமது ஷமி, ரவி பிஷ்னோய்.
இங்கிலாந்து பிளேயிங் லெவன்: பென் டக்கெட், பிலிப் சால்ட், ஜோஸ் பட்லர்(கே), ஹாரி புரூக், லியாம் லிவிங்ஸ்டோன், ஜேமி ஸ்மித், ஜேமி ஓவர்டன், பிரைடன் கார்ஸ், ஜோஃப்ரா ஆர்ச்சர், அடில் ரஷீத், மார்க் வுட்