இங்கிலாந்து அணி தற்போது இந்தியாவில் சுற்றுப்பணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடரில் இதுவரை நடந்து முடிந்த மூன்று போட்டிகளின் முடிவில் இந்திய அணி முதலிரண்டு போட்டிகளிலும், இங்கிலாந்து அணி மூனறாவது போட்டியிலும் வெற்றிபெற்று 2-1 என்ற கணக்கில் தொடரில் நீடித்து வருகின்றனர்.
இந்நிலையில் இத்தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் நான்காவது டி20 போட்டி இன்று (ஜனவரி 31) புனேவில் உள்ள மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெறவுள்ளது. இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள இங்கிலாந்து அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்து இந்திய அணியை பேட்டிங் செய்ய அழைத்துள்ளது. இப்போட்டிக்கான இங்கிலாந்து அணியில் மார்க் வுட், ஜேமி ஸ்மித் ஆகியோருக்கு பதிலாக சாகிப் மஹ்மூத், ஜேக்கப் பெத்தெல் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
அதேசமயம் இந்திய அணியைப் பொறுத்தவரையில் துருவ் ஜுரெல், வாஷிங்டன் சுந்தர் மற்றும் முகமது ஷமி ஆகியோர் பிளேயிங் லெவனில் இருந்து நீக்கப்பட்டு அர்ஷ்தீப் சிங், ரிங்கு சிங் மற்றும் ஷிவம் தூபே ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. வெற்றிபெற்றால் தொடரை கைப்பற்றும். அதேசமயம் இங்கிலாந்து அணி வெற்றிபெற்றால் தொடரை சமன்செய்யும். இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளன.
இந்தியா பிளேயிங் லெவன்: சஞ்சு சாம்சன், அபிஷேக் சர்மா, சூர்யகுமார் யாதவ்(கேப்டன்), திலக் வர்மா, ஹார்திக் பாண்டியா, ஷிவம் துபே, ரிங்கு சிங், அக்ஸர் படேல், அர்ஷ்தீப் சிங், ரவி பிஷ்னோய், வருண் சக்ரவர்த்தி
இங்கிலாந்து பிளேயிங் லெவன்: பிலிப் சால்ட், பென் டக்கெட், ஜோஸ் பட்லர்(கேப்டன்), ஹாரி புரூக், லியாம் லிவிங்ஸ்டோன், ஜேக்கப் பெத்தேல், ஜேமி ஓவர்டன், பிரைடன் கார்ஸ், ஜோஃப்ரா ஆர்ச்சர், ஆதில் ரஷீத், சாகிப் மஹ்மூத்