இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்துவரும் இந்திய அணி தற்போது 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடிவருகிறது.
இதில் ஓவல் மைதானத்தில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி அபார வெற்றிபெற்றது.
இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி லண்டன் லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் இன்று நடைபெறுகிறது.
இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பந்துவீசுவதாக தீர்மானித்துள்ளார்.
இப்போட்டிக்கான இந்திய அணி மீண்டும் விராட் கோலி இடம்பிடித்துள்ளார். ஸ்ரேயாஸ் ஐயர் அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
இங்கிலாந்து: ஜேசன் ராய், ஜானி பேர்ஸ்டோவ், ஜோ ரூட், பென் ஸ்டோக்ஸ், ஜோஸ் பட்லர்(கே), லியாம் லிவிங்ஸ்டோன், மொயின் அலி, கிரேக் ஓவர்டன், டேவிட் வில்லி, பிரைடன் கார்ஸ், ரீஸ் டாப்லி.
இந்தியா : ரோஹித் சர்மா (கே), ஷிகர் தவான், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ரிஷப் பந்த் , ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, முகமது ஷமி, ஜஸ்பிரித் பும்ரா, யுஸ்வேந்திர சாஹல், பிரசித் கிருஷ்ணா.