ஆசிய கோப்பை கிரிகெட் தொடரின் நடப்பாண்டு சீசன் ஹைப்ரீட் மாடலில் பாகிஸ்தான் மற்றும் இலங்கையில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெறும் குரூப் ஏ அணிகளுக்கு இடையேயான போட்டியில் இந்தியா மற்றும் நேபாளம் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
அதன்படி இலங்கையிலுள்ள பல்லகலேவில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள இந்திய அணியின் கேப்டன் முதலில் பந்துவீசுவதாக தீர்மானித்துள்ளார். இன்றைய போட்டிக்கான இந்திய அணியில் ஜஸ்ப்ரித் பும்ரா இடம்பிடிக்க முடியாத காரணத்தால் முகமது ஷமிக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
அதேசமயம் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் இந்தியா மற்றும் நேபாள் அணிகள் முதல் முறையாக மோதவுள்ளதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.
நேபாளம் : குஷால் புர்டெல், ஆசிப் ஷேக், ரோஹித் பவுடல்(கே), பீம் ஷர்கி, சோம்பால் கமி, குல்சன் ஜா, திபேந்திர சிங் ஐரி, குஷால் மல்லா, சந்தீப் லாமிச்சானே, கரண் கேசி, லலித் ராஜ்பன்ஷி.
இந்தியா: ரோஹித் சர்மா (கே), ஷுப்மான் கில், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், இஷான் கிஷன், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், குல்தீப் யாதவ், முகமது ஷமி, முகமது சிராஜ்.