இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்துவரும் நியூசிலாந்து அணி தற்போது மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் ராஞ்சியில் நேற்று நடைபெற்ற முதலாவது டி20 போட்டியில் நியூசிலாந்து அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி தொடரில் முன்னிலைப் பெற்றுள்ளது.
இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டி20 போட்டி இன்று லக்னோவிலுள்ள எக்னா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இப்போட்டியில் வெற்றிபெற்றால் மட்டுமே இந்திய அணியால் தொடரில் நீடிக்க முடியும் என்பதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.
இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள நியூசிலாந்து அணியின் கேப்டன் மிட்செல் சாண்ட்னர் முதலில் பேட்டிங் செய்வதாக தீர்மானித்துள்ளார். இன்றைய போட்டிக்கான இந்திய அணியில் உம்ரான் மாலிக்கிற்கு பதிலாக யுஸ்வேந்திர சஹால் சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்தியா: சுப்மான் கில், இஷான் கிஷான், ராகுல் திரிபாதி, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா(கே), தீபக் ஹூடா, வாஷிங்டன் சுந்தர், சிவம் மாவி, குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சாஹல், அர்ஷ்தீப் சிங்
நியூசிலாந்து : ஃபின் ஆலன், டெவோன் கான்வே, மார்க் சாப்மேன், க்ளென் பிலிப்ஸ், டேரில் மிட்செல், மைக்கேல் பிரேஸ்வெல், மிட்செல் சான்ட்னர்(கே), இஷ் சோதி, ஜேக்கப் டஃபி, லாக்கி பெர்குசன், பிளேயர் டிக்னர்.