இந்தியா வந்துள்ள தென் ஆப்பிரிக்க அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது.
இதில் லக்னோவில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் இந்திய டாப் ஆர்டர் பேட்டர்கள் டெஸ்ட் விளையாடி சொதப்பியதால், இந்தியா கடைசி நேரத்தில் 9 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.
இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று ராஞ்சியில் நடைபெறுகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்துள்ளது.
இன்றைய போட்டிக்கான இந்திய அணியில் ஷபாஸ் அஹ்மத் அறிமுக வீரராக சேர்க்கப்பட்டுள்ளார். அதேசமயம் வாஷிங்டன் சுந்தர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
தென் ஆப்பிரிக்கா: ஜான்மேன் மலான், குயின்டன் டி காக், ரீசா ஹென்ட்ரிக்ஸ், ஐடன் மார்க்ரம், ஹென்ரிச் கிளாசென், டேவிட் மில்லர், வெய்ன் பார்னெல், கேசவ் மகராஜ்(கே), பிஜோர்ன் ஃபோர்டுயின், ககிசோ ரபாடா, அன்ரிச் நோர்ட்ஜே.
இந்தியா: ஷிகர் தவான்(கே), ஷுப்மான் கில், இஷான் கிஷன், ஷ்ரேயாஸ் ஐயர், சஞ்சு சாம்சன், வாஷிங்டன் சுந்தர், ஷாபாஸ் அகமது, ஷர்துல் தாக்கூர், குல்தீப் யாதவ், முகமது சிராஜ், அவேஷ் கான்.