இந்தியா வந்துள்ள இலங்கை அணி, தற்போது மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது.இதில் முதல் போட்டியில் இரு அணிகளும் கடுமையாக போராடிய நிலையில், இறுதியில் இந்திய அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பெற்றது.
இதனைத் தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது டி20 போட்டியில் இலங்கை கேப்டன் தஷுன் ஷனகா பேட்டிங் மற்றும் பந்துவீச்சு இரண்டிலும் மிரட்டலாக செயல்பட்டு அணிக்கு 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியைப் பெற்றுக்கொடுத்தார். இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது டி20 போட்டி இன்று ராஜ்கோட்டில் நடைபெறுகிறது.
இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள இந்திய அணி முதலில் பேட்டிங் செய்வதாக தீர்மானித்து. மேலும் இன்றைய போட்டிக்கான இந்திய அணியில் எந்தவித மாற்றங்களும் செய்யப்படவில்லை.
இந்தியா – இஷான் கிஷன், ஷுப்மான் கில், சூர்யகுமார் யாதவ், ராகுல் திரிபாதி, ஹர்திக் பாண்டியா (கே), தீபக் ஹூடா, அக்சர் படேல், சிவம் மாவி, உம்ரான் மாலிக், அர்ஷ்தீப் சிங், யுஸ்வேந்திர சாஹல்
இலங்கை – பதும் நிஸ்ஸங்க, குசல் மெண்டிஸ், தனஞ்சய டி சில்வா, சரித் அசலங்கா, அவிஷ்கா ஃபெர்னாண்டோ, தசுன் ஷனக (கே), வனிந்து ஹசரங்க, சாமிக்க கருணாரத்ன, மஹீஷ் தீக்ஷன, கசுன் ராஜித, டில்ஷான் மதுஷங்க.