வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்ற முடிந்த முதலாவது டி20 போட்டியில் இந்திய அணி வெஸ்ட் இண்டீஸிடம் தோல்வியடைந்து 1-0 என்ற கணக்கில் தொடரில் பின்னடைவை சந்திந்துள்ளது.
இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டி20 போட்டி இன்று கயானாவில் நடைபெறுகிறது. இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள இந்திய அணி கேப்டன் ஹர்திக் பாண்டியா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்துள்ளார்.
இன்றைய போட்டிக்கான இந்திய அணியில் குல்தீப் யாதவுக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ள ரவி பிஷ்னோய் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். அதேசமயம் வெஸ்ட் இண்டீஸ் அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.
வெஸ்ட் இண்டீஸ்: பிராண்டன் கிங், கைல் மேயர்ஸ், ஜான்சன் சார்லஸ், நிக்கோலஸ் பூரன், ரோவ்மேன் பவல்(கே), ஷிம்ரோன் ஹெட்மையர், ரொமாரியோ ஷெப்ஃபர்ட், ஜேசன் ஹோல்டர், அகீல் ஹொசைன், அல்ஸாரி ஜோஸப், ஓபேத் மெக்காய்
இந்தியா: இஷான் கிஷன், ஷுப்மான் கில், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா(கே), சஞ்சு சாம்சன், அக்ஸர் படேல், அர்ஷ்தீப் சிங், யுஸ்வேந்திர சாஹல், முகேஷ் குமார், ரவி பிஷ்னோய்.