ஆஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில் டெஸ்ட் தொடரை இந்திய அணி கைப்பற்றியது. இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் நடைபெற்று முடிந்த இரண்டு போட்டிகளின் முடிவில் 2-0 என ஆஸ்திரேலிய அணி தொடரை ஏற்கனவே கைப்பற்றி விட்டது.
இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான 3ஆவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று மும்பையில் நடைபெறுகிறது. அதன்படி வான்கடே மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள ஆஸ்திரேலிய மகளிர் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்துள்ளது. இன்றைய போட்டிக்கான இந்திய அணியில் மன்னத் காஷ்யப் அறிமுக வீராங்கனையாக சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்திய மகளிர் அணி: யாஸ்திகா பாட்டியா, ஸ்மிருதி மந்தனா, ரிச்சா கோஷ், ஜெமிமா ரோட்ரிக்ஸ், ஹர்மன்ப்ரீத் கவுர்(கே), தீப்தி சர்மா, மன்னத் காஷ்யப், அமன்ஜோத் கவுர், பூஜா வஸ்த்ரகர், ஸ்ரேயங்கா பாட்டீல், ரேணுகா தாக்கூர் சிங்
ஆஸ்திரேலிய மகளிர் அணி: ஃபோப் லிட்ச்ஃபீல்ட், அலிசா ஹீலி(கே), எல்லிஸ் பெர்ரி, பெத் மூனி, தாஹிலா மெக்ராத், ஆஷ்லே கார்ட்னர், அனாபெல் சதர்லேண்ட், ஜார்ஜியா வேர்ஹாம், அலனா கிங், கிம் கார்த், மேகன் ஷட்.