இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்றுவரும் டி20 தொடரின் முதல் போட்டியில் இந்திய மகளிர் அணி அபாரமான வெற்றியைப் பதிவுசெய்து 1-0 என்ர கணக்கில் தொடரில் முன்னிலைப் பெற்றுள்ளது.
இதையடுத்து இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டியானது இன்று நவி மும்பையில் உள்ள டிஒய் பாட்டில் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்துள்ளது. இப்போட்டிக்கான இந்திய அணியில் ஹர்மன்ப்ரீத் கவுர் இடம்பிடிக்காத காரணத்தால் ஸ்மிருதி மந்தனா அணியின் கேப்டனாக செயல்படவுள்ளார்.
வெஸ்ட் இண்டீஸ் மகளிர் பிளேயிங் லெவன்: ஹிலி மேத்யூஸ்(கே), கியானா ஜோசப், ஷெமைன் காம்ப்பெல், டியாண்ட்ரா டோட்டின், சினெல்லே ஹென்றி, நெரிசா கிராப்டன், ஷபிகா கஜ்னபி, ஜைதா ஜேம்ஸ், அஃபி பிளெட்சர், கரிஷ்மா ராம்ஹராக், அஷ்மினி முனிசார்
இந்திய மகளிர் பிளேயிங் லெவன்: ஸ்மிருதி மந்தனா(கே), உமா செத்ரி, ஜெமிமா ரோட்ரிக்ஸ், ரிச்சா கோஷ், ரக்வி பிஸ்ட், சஜீவன் சஜனா, தீப்தி ஷர்மா, ராதா யாதவ், சைமா தாக்கூர், டைட்டாஸ் சாது, ரேணுகா தாக்கூர் சிங்