ஐபிஎல் தொடரில் இன்று இரண்டு போட்டிகள் நடைபெறுகின்றன. அதில் தற்போது அபுதாபில் தொடங்கும் 36ஆவது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்கொள்கிறது.
இப்போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் சஞ்சு சாம்சன் முதலில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை பேட்டிங் செய்ய அழைத்துள்ளார்.
இன்றையப் போட்டிக்கான ராஜஸ்தான் அணியில் எவின் லூயிஸ், கிறிஸ் மோரிஸ் ஆகியோருக்கு பதிலாக தப்ரைஸ் ஷம்ஸி, டேவிட் மில்லர் ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியில் மார்கஸ் ஸ்டொய்னிஸ்ற்கு பதிலாக லலித் யாதவ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
டெல்லி கேப்பிட்டல்ஸ்- பிருத்வி ஷா, ஷிகர் தவான், ஷ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பந்த் (கே), லலித் யாதவ், சிம்ரான் ஹெட்மையர், அக்ஸர் பட்டேல், ரவிச்சந்திரன் அஸ்வின், ககிசோ ரபாடா, அன்ரிச் நோர்ட்ஜே, அவேஷ் கான்.
ராஜஸ்தான் ராயல்ஸ் - யஷஸ்வி ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன் (கே), லியாம் லிவிங்ஸ்டோன், டேவிட் மில்லர், மஹிபால் லமோர், ரியான் பராக், ராகுல் திவேத்தியா, முஸ்தாபிசுர் ரஹ்மான், தப்ரைஸ் ஷம்ஸி,சேத்தன் சக்காரியா, கார்திக் தியாகி.