ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் எலிமினேட்டர் சுற்று போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
போட்டி நடைபெறும் ஈடன் கார்டன் மைதானத்தில் மழைபொழிவு இருந்ததான் காரணமாக டாஸ் சற்று நேரம் தாமதமானது.
அதன்பின் இப்போட்டியில் டாஸ் வென்ற லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக தீர்மானித்தது.
இன்றைய போட்டிக்கான லக்னோ அணியில் குர்னால் பாண்டியா, துஷ்மந்தா சமீரா ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். அதேசமயம் ஆர்சிபி அணியில் முகமது சிராஜ் சேர்க்கப்பட்டுள்ளார்.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்: ஃபாஃப் டு பிளெஸ்ஸிஸ் (கே), விராட் கோலி, ரஜத் படிதார், கிளென் மேக்ஸ்வெல், மஹிபால் லோம்ரோர், தினேஷ் கார்த்திக் , ஷாபாஸ் அகமது, வனிந்து ஹசரங்கா, ஹர்ஷல் படேல், ஜோஷ் ஹேசில்வுட், முகமது சிராஜ்.
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்: குயின்டன் டி காக், கேஎல் ராகுல்(கே), எவின் லூயிஸ், தீபக் ஹூடா, க்ருனால் பாண்டியா, மனன் வோஹ்ரா, மார்கஸ் ஸ்டோனிஸ், மொஹ்சின் கான், அவேஷ் கான், துஷ்மந்த சமீரா, ரவி பிஷ்னோய்.